அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டுள்ளதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9வது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட்சம் ஆசிரியர்களையேனும் சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடக்கு மாகாணசபை உள்ளது.
அதேவேளை, வடக்கில் கழிவு முகாமைத்துவம் முறையாக செய்யப்படாத நிலையில் மாநகரம் கழிவுகளால் நிரம்பி காணப்படுகின்றது. வடக்கு மாகாண சபை செய்யவேண்டிய விடயங்களைக்கூட செய்யாமல் விட்டிருக்கின்றது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும் அவற்றைக்கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை.
அரசாங்கம் வழங்கும் மிக சொற்பமான நிதியை தவிர இந்த மாகாண சபை வேறு எந்த நிதியை பெற்றிருக்கின்றது? சுகாதார அமைச்சு, அரசு வழங்கும் நிதிக்கு மேலதிகமாக சுமார் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை பெற்று மக்களுக்காக பயன்படுத்தியுள்ளது.
இதேபோன்று இரணைமடு- யாழ்ப்பாணம் நீர் திட்டத்தை நிராகரித்தவர்கள் இதுவரை அதற்காக வழங்கிய மாற்று திட்டம் என்ன? சுமார் 360 தீர்மானங்களை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியுள்ள போதிலும் அதனால் எந்த பயனும் கிடையாது. தீர்மானங்கள் சட்ட வலுவற்றவை.” என்றுள்ளார்.

0 Responses to அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா