Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு!

பதிந்தவர்: தம்பியன் 04 May 2017

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 42 பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று புதன்கிழமை இவர்கள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பதிலீட்டு நடவடிக்கைகள் எவையும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகத்திலிருந்து அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினால் உள்ளக ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com