Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையினை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு கோரியே விண்ணப்பம் செய்திருந்தார்.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும், அதன் காரணமாக குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேகோன், கடிதம் மூலம் பசீர் சேகுதாவூத்துக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்குள், தகவல் அறியும் உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடலாம் என்றும், பசீருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக, பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அங்கும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், “அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, நீதி மன்றத்தை நாடுவேன்” என்றும் பசீர் கூறியுள்ளார்.

“நூற்றாண்டு காலப் பழமையான ஆவணங்கள் கூட, தேசிய சுவடிக் கூடத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகின்றபோது, அஷ்ரப் மரணமடைந்து வெறும் 12 வருடங்களேயான நிலையில், ஆணைக்குழுவின் அறிக்கையை, ஏன் தேடித் தர முடியாது” என்றும் பசீர் சேகுதாவூத்துக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com