“அன்று என்னிடம் இருந்த அதிகாரங்களுக்கு அமைய தேவை ஏற்பட்டிருப்பின் ஒரே இரவில் கொழும்பினைச் சுற்றி வளைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருப்பேன். எனினும், நான் ஒழுங்கங்களுக்கு கட்டுப்பட்டவன். ஆக, அப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.”
என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையில் உயர் பதவியை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, “சரத் பொன்சேகாவுக் பாதுகாப்புத் துறையில் உயர்பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கேலியாகவே குறிப்பிட்டார்“ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விடயங்கள் குறித்து பதிலளித்த சரத் பொன்சேகா, “எஸ்.பி.திசாநாயக்க அமைச்சர் என்பதால் அவரை மதிக்கிறேன். அவர் அனைத்தையும் கேலியாக மாற்றிக்கொண்டுள்ளார். அத்துடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன தனது பதவி தொடர்பில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு நெருக்கமானர். எனக்கு வழங்கப்படவுள்ளதாக பேசப்படும் புதிய பதவியால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் அச்சத்தில் இருக்கின்றார். எனினும், இப்படியானவர்கள் கூறும் கதைகளை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ஒரே இரவில் ஆட்சியைப் பிடிக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தது: சரத்