புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பாக ஆராயப்பட்டு அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறையை சரியான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமூகத்தில் உள் ஈர்ப்பு செய்யப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்!