இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க சுவிஸ் நாட்டின் குடியுரிமையைக் வைத்துக் கொண்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில், தன்னைவிட ஆளும் கட்சியில் அமைச்சுப் பொறுப்பில் உள்ள சிலரும் இரட்டைக் குடியுரிமையுடன் இருப்பதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார். அவர் மாத்திரமன்றி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் இவ்வாறான கருத்தைக் கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பதாக அமைச்சர் ஒருவரும் கூறியுள்ளார். அப்படியாயின் அவர்கள் யார்? என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். கீதா குமாரசிங்கவுக்கு ஒரு நீதியும், ஏனையவர்களுக்கு வேறு நீதியும் எவ்வாறு பின்பற்றப்பட முடியும் என்றும் விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்?; ஜே.வி.பி கேள்வி!