பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றார். இதனை தொடர்ந்து, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடம், தியோடர் ஹெர்சல் நினைவகம் இடங்களுக்கு மோடி சென்றார்.
பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பிரதமர் மோடி பேசியதாவது, “பயங்ரவாதம், வன்முறைக்கு எதிராக போராட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும். அதற்கான சரியான நேரம் இது தான். உலத்தையே உலுக்கி வரும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுசேர வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்; இஸ்ரேல் சென்ற மோடி தெரிவிப்பு!