Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் நாளை வெள்ளிக்கிழமை ஜி20 அமைப்பின் நாடுகளது மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன்கிழமை இரவு கூடிய சுமார் 500 பொது மக்கள் களைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போலிசார் அவர்களை விரட்டினர். இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் நாளை நடைபெறவுள்ள மாநாட்டிலும் ஆயிரக் கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் வன்முறை வெடிக்கவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 000 போலிசார் ஹம்பர்க் நகரில் குவிக்கப் பட்டுள்ளனர்.

ஜேர்மனியின் 2 ஆவது மிகப்பெரிய நகரான ஹம்பர்க்கில் அந்நாட்டு சேன்சலர் ஏஞ்சலா மேர்க்கெலினால் நாளை வெள்ளிக்கிழமை G20 மாநாடு தொடங்கி வைக்கப் படுகின்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, துருக்கி
உட்பட பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜேர்மனியில் G20 மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடும் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com