Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் லிட்டில் ராக் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாளில் ஒரு rap நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமை காரணமாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு என்றும் தீவிரவாதச் செயல் அல்ல என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் போலிசார் உடனடியாக விரைந்து செயற்பட்ட காரணத்தால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரது நிலமை வைத்திய சாலையில் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் தொடர்புடைய எவரும் இதுவரை கைதாகவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள ப்ரோன்ஸ் லெபனான் பகுதியில் 2 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.  அதாவது இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் சனிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த டாக்டர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த நோயாளிகளும் மருத்துவ மனை ஊழியர்களும் சிதறி ஓடி அறைகளில் சென்று மறைந்து கொண்டனர். சம்பவத்தைக் கேள்விப் பட்ட போலிசார் மருத்துவ மனையை சுற்றிவளைத்து உள்ளே புகுந்தனர். இதன் போது துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய டாக்டர் ஹென்ரி பெல்லோ தன்னைத் தானே சுட்டு அங்கு இறந்து கிடந்ததாகத் தெரிய வருகின்றது.

இதுவும் தீவிரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ள போலிசார் இச்சம்பவத்தில் ஒரு நோயாளி கொல்லப் பட்டதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூடத் தெரிவித்துள்ளனர்.

0 Responses to அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com