‘பசு பாதுகாப்பு’ என்கிற பெயரில் பொதுமக்களை அடித்து கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். காலத்தின் அடிப்படை கோட்பாடுகளை காப்பாற்ற நாம் விழிப்புடன் இருக்கிறோமா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பத்திரிகை வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே குடியரசுத் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசியுள்ளதாவது, “நாட்டில் பொதுமக்களை விசாரணையின்றி அடித்து கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. நாட்டின் அடிப்படை கோட்பாடுகளை காப்பாற்ற நமது சமுதாயம் போதுமான விழிப்புடன் செயல்படுகிறதா? பொதுமக்களை கும்பல்கள் அடித்து கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த சம்பவங்களை நாம் உடனே நிறுத்த வேண்டும்.
நாம் போதுமான எச்சரிக்கையுடன் இருக்கிறோமா என்பது குறித்து தான் பேசுகிறேன். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள கூடாது என்று மகாத்மா காந்தி ஏற்கனவே எச்சரித்துள்ளதை இங்கு நினைவு கூறுகிறேன். பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களை அடித்து கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள் மற்றும் மக்களின் அறிவார்ந்த நடவடிக்கைகள் உதவும் என்று நம்புகிறேன். ” என்றுள்ளார்.

0 Responses to ‘பசு பாதுகாப்பு’ என்கிற பெயரில் பொதுமக்களை அடித்துக் கொல்லக் கூடாது: பிரணாப் முகர்ஜி