அரச சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் அரசாங்கத்தினால் தலையிட முடியாது என்றும் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலங்களில், தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் புறந்தள்ளிவிட்டு விஜயதாச ராஜபக்ஷவுக்கு விருப்பு வாக்குகளை அளித்த கொழும்பு வாழ் சிறுபான்மை வாக்காளர்களை, அவரின் நடவடிக்கைககள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகள் விவகாரம் எனது அமைச்சின் கீழ் வருகிறது. எனவே அமைச்சருக்கு எந்த ஒரு அரச சார்பற்ற சமூக அமைப்பு தொடர்பில் முறைப்பாடு இருக்குமானால் அதை அவர் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எவராவது சட்டத்தை மீறி இருப்பார்களேயானால், அதை நான் சட்டப்படி கையாள்வேன்.
அதைவிடுத்து எனது வரையறைக்குள் நுழைந்து, அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களும், நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும், தேசிய நலனுக்கும் ஊறு விளைவிப்பதாக பொதுப்படையாக கூற வேண்டாம்.
உண்மையில் சில மத அமைப்புகளும், அரசியல் வாதிகளும்தான் தேசிய ஐக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கூறி வைக்கிறேன்.
பௌத்த விகாரைகள் விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என எப்படி அவர் கூற முடியும்? உண்மையில் இன்றைய அரசியலமைப்பில், பெளத்தத்துக்கு இருக்கும் முன்னுரிமை அப்படியே இருக்க போகிறது. இது எனக்கும், விஜயதாச ராஜபக்ஷ உட்பட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் எல்லா அங்கத்தவர்களுக்கும் தெரியும்.” என்றுள்ளார்.

0 Responses to அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்களை ஏற்க முடியாது: மனோ