Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் வழக்குகளை தற்போது எதிர்கொண்டுள்ள அதிகாரிகள் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அசோக்குமார் ரெட்டி என்பவர், ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் பட்டியலை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தகவல் ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் தெரிவித்துள்ளதாவது, “மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான துறைசார்ந்த மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 4(1)–வது பிரிவின் வரம்புக்கு உட்பட்டவை. எனவே, அரசுத்துறைகள் தங்களது செயல்பாடுகளை பொதுமக்கள் பார்வைக்கு முன்வைப்பது கட்டாயம் ஆகும்.

இந்த அடிப்படையில், ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் அதிகாரிகள் பற்றிய புள்ளிவிவரத்தை இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும். எந்த சூழ்நிலையிலும், அந்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது. அவர்களின் எண்ணிக்கையை மட்டும் வெளியிடுமாறு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கு உத்தரவிடுகிறோம்.

ஆண்டுவாரியாக நிலுவையில் இருந்த வழக்குகள் எண்ணிக்கை, உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில், துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளானோர், ஆண்டுவாரியாக ‘பைசல்’ செய்யப்பட்ட கோர்ட்டு வழக்குகள் எண்ணிக்கை, குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ள அதிகாரி வகிக்கும் பதவியின் அந்தஸ்து, விசாரணையில் கண்டறியப்பட்ட உண்மைகள் ஆகிய அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இதுபோன்ற விவரங்களை வெளியிடுவது சிறப்பான ஆட்சிமுறைக்கு கருவியாக அமைவதுடன், சந்தேகத்துக்கு இடமின்றி பொதுநலனுக்கு உகந்ததாக திகழும்.” என்றுள்ளார்.

0 Responses to ஊழல் வழக்குகளை சந்தித்துள்ள அதிகாரிகளின் தகவல்களை வெளியிட வேண்டும்; மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com