Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா–பூடான்–சீனா எல்லை அருகே டோகா லா பகுதியில் உள்ள லால்டன் என்ற இடத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 01ஆம் திகதி அங்கு வந்த சீன இராணுவத்தினர், அந்த பதுங்கு குழிகளை அகற்றுமாறு கூறினர். அதுபற்றி தங்கள் படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய இராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதற்குள், கடந்த மாதம் 06ஆம் திகதி இரவு, புல்டோசர்கள் உதவியுடன் 2 பதுங்கு குழிகளையும் சீன இராணுவத்தினர் அழித்தனர். அங்கிருந்த இந்திய இராணுவத்தினர், அவர்கள் மேற்கொண்டு சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதையும் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முறுகல் முற்றியது.

மேலும், இந்திய இராணுவத்தினர் அப்பகுதியில் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அதுபோல், சீன படையினரும் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 08ஆம் திகதி, இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.

இதனால் இதுபற்றி விவாதிக்க கொடி கூட்டத்துக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. 2 அழைப்புகளை நிராகரித்த சீனா, 3வது அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றது. லால்டன் பகுதியில் இருந்து இந்திய இராணுவத்தை திரும்பப்பெறுமாறு, கூட்டத்தில் சீன இராணுவம் தெரிவித்தது. அதை இந்திய இராணுவம் ஏற்க மறுத்துவிட்டது.

0 Responses to சிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லையில் பதற்றம்; இந்திய இராணுவம் குவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com