Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மயிலிட்டி மக்களது போராட்ட அறிவிப்பிற்கு அஞ்சியும் போர்க்குற்றச்சாட்டுக்களினிலிருந்து சர்வதேசத்திடம் தப்பிக்க ஆகக்குறைந்தது இவ்வாறான நிலங்களை விடுவிப்பதனை மட்டுமே இலங்கை அரசால் செய்ய முடியுமென்பதாலுமேயே வலி.வடக்கினில் மயிலிட்டியினில் 54 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதென அம்பலப்படுத்தியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.மயிலிட்டி விடுவிப்பு தமிழரசின் அரசியல் போராட்ட வெற்றியென சொல்வது வெறும் கண்துடைப்பெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழப்பாணத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் ஊடகவியலாளரது கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் உண்மையினில் தமது நிலத்தை விடுவிக்க கோரும் போராட்டத்திற்கு இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்கள் தயாராகிவந்திருந்தனர்.அவர்களது போராட்டம் நிச்சயம் ஆயிரக்கணக்கினில் திரளும் மக்கள் போராட்டமாக இருக்கும்.அதனால் தான் நூறு நாள்களை தாண்டி நீடிக்கும் காணாமல் போனோரது குடும்பங்களதும் கேப்பாபிலவு மக்களது நிலவிடுவிப்பு போராட்டங்களிற்கு பதிலளிக்காத அரசு மயிலிட்டியை விடுவித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே கடந்த காலங்களில் டக்ளஸின் இணக்க அரசியலாலும் மீட்க முடிந்திராத நிலத்தை மீட்டெடுத்தது உண்மையில் பெரிய சாதனையென சுமந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மயிலிட்டி விடுவிப்பு மக்கள் போராட்டத்தின் வெற்றியே!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com