மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக 20வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதோடு, இது தொடர்பில் சகல மாகாண சபைகளினதும் அபிப்பிராயம் கோரப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு இந்த திருத்தத்தை கருவியாக பயன்படுத்தக் கூடாது என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், 20வது திருத்தம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? இல்லையா? என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. மாகாண சபைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
“மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த யோசனையும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டு , உடன்பாடு காணப்பட்டது.
ஒரு தேர்தல் நடத்துவதற்காக 80 கோடி ரூபா செலவாகிறது. இது தவிர அரச உத்தியோகஸ்தர்களின் நேரமும் விரயமாகிறது. அரசியல் சண்டைகள் இடம் பெறுவதோடு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மாற்றப்பட்டுள்ளதால் மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தல் முறையையும் மாற்ற வேண்டும். 20வது திருத்தத்தை முன்னெடுக்கும் உடன்பாட்டுடனே நாம் 19வது திருதத்தை ஆதரித்தோம்.
தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக 20வது திருத்த யோசனை முன்வைக்கப்படவில்லை. தேர்தலை ஒத்திவைப்பதற்காக இதனை பயன்படுத்த கூடாது என்பதே எமது தரப்பு நிலைப்பாடாகும்.
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்துள்ள நிலையில் மாகாண சபை தேர்தலையும் ஒத்திவைக்க தயாராவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக எவருக்கும் வழக்குத் தொடர முடியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே தேர்தல் ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பது உறுதியாகும். ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு மாகாண சபைகளின் அனுமதி தேவை.
அனுமதி கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும். மாகாண சபைகளின் அனுமதிக்காக இந்த யோசனை அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வரை இந்த பிரச்சினை நீடிக்கும் என கருதலாம். இடைக்கிடை தேர்தல் நடத்தாமல் ஒரே தினத்தில் தேர்தல் நடத்துவது தான் எமது குறிக்கோளாகும்.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக 20வது திருத்தம் கொண்டுவரப்படவில்லை: தயாசிறி ஜயசேகர