2 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஆண் மருத்துவத் தாதி ஒருவர் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமாக மருந்துகளை அளித்ததன் மூலம் கிட்டத்தட்ட 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமாகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் ஜேர்மனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியின் வடக்கே உள்ள பிரெமென் நகரிலுள்ள மருத்துவ மனையில் வேலை பார்த்து வந்த 40 வயதாகும் ஆண் மருத்துவத் தாதியான நீல்ஸ் ஹோகெல் ஏற்கனவே வைத்திய சாலையில் இரு கொலை குற்றங்களுக்காக 2015 ஆம் ஆண்டு கைது செய்யப் பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இறந்த 130 நோயாளிகளின் பிரேத பரிசோதகர்கள் அளித்த தகவலில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஹோகெல் வேலை பார்த்த காலப் பகுதியில் அளவுக்கதிகமான மருந்து அளிக்கப் பட்டதால் தான் குறித்த 90 நோயாளிகள் இறக்க நேரிட்டது எனத் தெரிய வந்துள்ளது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாகத் தகவல் அளித்த குறித்த நகரின் பிரதான போலிஸ் அதிகாரி ஜேர்மனியில் இதற்கு முன்னர் இது போன்ற ஒரு குற்றச் செயல் நடைபெற்றதாகத் தான் கேள்விப் பட்டதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹோகெல் தான் நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதாகத் தனது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது ஹோகெல் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

0 Responses to அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி