Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 3 கிழமைகள் சிறையில் கழித்த சவுதி இளவரசர் மிட்டெப் பின் அப்துல்லா $1 பில்லியன் டாலர்கள் அரசுக்கு செலுத்தி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.

அண்மையில் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மான் எடுத்த அதிரடி நடவடிக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த 200 அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள், வியாபாரிகள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர். இவர்களுக்கு தமது சொத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கும் பட்சத்தில் விடுவிக்கப் படுவர் என்ற சலுகையும் அளிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் தான் தற்போது முன்னால் நேஷனல் கார்ட் இயக்குனராக இருந்த இளவரசர் மிட்டெப் பின் அப்துல்லா $1 பில்லியன் டாலர்கள் அரசுக்கு செலுத்தி செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப் பட்டுள்ளார். தனது விடுதலைக்குப் பின்னர் இவர் ஊடகப் பேட்டிகளுக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.

சவுதியில் கடந்த பல தசாப்தங்களாக கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் பணம் ஊழலில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com