Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தினர்களான விவேக் மற்றும் கிருஷ்ணபிரியா வீடுகளிலும், ஜெயா டிவி அலுவலகத்திலும் இன்று திங்கட்கிழமை 5வது நாளாகவும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை ஆபரஷேன் கிளீன் மணி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் உள்ள சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9 ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.

இந்த வருமான வரித்துறை சோதனை 5வது நாளாக இன்றும் சில இடங்களில் நீடித்து வருகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விவேக் வீடு மற்றும் ஜெயாடிவி அலுவலகத்திலும் இன்று சோதனை நடந்து வருகிறது. அதேபோல், கொடநாடு கர்சன் டீ எஸ்டேட், காஞ்சிபுரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நீடித்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கிய வருமான வரித்துறை சோதனை 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

0 Responses to ஜெயா டிவி அலுவலகத்திலும், விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளிலும் 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com