Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் சகல மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவு- செலவுத் திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு, செலவுத் திட்டமானது தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் பயனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு முன்வைத்திருந்த யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, மாற்றுதிறனாளி பெண்களுக்கான வீடுகள், விதவைப் பெண்களுக்கான தேவைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை கருத்திற்கொண்டு அவற்றுக்கான முதலீடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த யோசனைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

0 Responses to அனைவருக்கும் நன்மையளிக்கும் வரவு - செலவுத் திட்டம்: கூட்டமைப்பு பாராட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com