2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கூட்டு அரசாங்கத்தின் உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் எதிராக வாக்களித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் ஆரம்பமாகின்றது. இந்த விவாதம் டிசம்பர் 09ஆம் திகதி வரை காலை 09.30 தொடக்கம் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் விவாதிக்கப்படவுள்ளது.

0 Responses to வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!