தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி சபைக்கும் தேர்தல் நடத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், யாழ். மாவட்டத்தில் கூட சாவகச்சேரி நகர சபைக்கு மட்டுமே தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் எந்தவொரு தொகுதியிலும் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது. வடக்கில் ஒரேயொரு உள்ளூராட்சி சபைக்கு மாத்திரமே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அதேசமயம், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், நிந்தவூர், கல்முனை, திருக்கோவில், அம்பாறை, தமன, உகன ஆகிய 7 உள்ளூராட்சி சபைகளை தவிர்த்து ஏனைய 12 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபை, தெஹியத்தகண்டி, நாமல் ஓயா, பதியதலாவ, நாவிதன்வெளி, சம்மாந்துறை, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, லாகுகல, காரைதீவு ஆகிய 12 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு கோரப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், சேருவில, கோமரங்கடவல, பதவி சிறிபுர, திருகோணமலை பட்டணமும் சூழலும், தம்பலகாமம், கிண்ணியா ஆகிய பிரச சபைகளுக்கு வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளது.
திருமலை நகர சபை, கிண்ணியா நகர சபை, மூதூர், குச்சவெளி, கந்தளாய், மொரவெவ ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபை ஏறாவூர் பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று, மண்முனை ஆகிய பிரதேச சபைகளுக்கு மட்டும் வேட்புமனு கோரப்பட்டுள்ளது.
மட்டு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை, கோரளைப்பற்று, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, மண்முனை தெற்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
மேலே தெரிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் நடத்தாத உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பில் காணப்படும் குறைபாடுகளை முற்று முழுதாக கலைந்த பின்னரே தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்தது.
இதேபோன்று குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகல, அநுராதபுரம், பொலநறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளில் கூட ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குக்கூட தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை கல்கிசை மாநகர சபை, மகரகம நகரசபை, பொலஸ்கமுவ நகர சபை ஆகிய மூன்று சபைகளுக்கே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, மாபோல நகர சபை, மினுவாங்கொட நகரசபை ஜாஎல நகர சபை, பேலியகொட நகரசபை, வத்தளை பிரதேச சபை, பியகம பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபை, கம்பஹா மாநகர சபை, அத்தனகலை, மகர, மினுவாங்கொட, கட்டான, தீவுலப்பிட்டிய, களனி, கடவத்த, ஜாஎல, சீதுவ, கட்டநாயக்க உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை நகரசபை, பேருவளை நகர சபை, ஹொரன நகர சபை பண்டாரகம, அகலவத்த பிரதேச சபைகள் ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
பேருவளை பிரதேச சபை, களுத்துறை, நகர சபை, பிரதே சபை, பாணந்துறை பிரதேச சபை, மத்துகம நகர சபை, ஹொரனை பிரதேச சபை, புளத்சிங்கள பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படமாட்டாது.
0 Responses to 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்; வடக்கில் சாவகச்சேரியில் மட்டும் தேர்தல்!