அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில், அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பிளவுபடுமென அஞ்சுபவர்கள் மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்காது, அதனைத் தடுக்கும் வகையிலான மேலதிக யோசனைகளை முன்வைக்க வேண்டும்.
நாட்டில் இனவாதம் மேலும் பரப்பப்படுமாயின் இனங்களுக்கிடையிலான மோதல்களே அதிகரிக்கும். புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் போலல்லாது, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான மோதல்களே உருவாகும்.
அதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்பில் ஒரு பகுதியாகும். அரசியலமைப்பு என்பதே முழுமையான அதிகாரப் பகிர்வு என்பது போன்ற நிலைப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது. வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில் அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க