Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று திங்கட்கிழமை புருஸ்ஸெல்ஸில் கூடிய ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு அமைச்சர்கள் வெனிசுலா மீது பொருளாதாரத் தடை மற்றும் ஆயுத விற்பனைக்கு ரத்து ஆகிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற பிராந்திய தேர்தலில் முறைகேடு நிகழ்ந்தது அந்நாட்டில் ஏற்கனவே உள்ள அரசியல் குழப்ப நிலையை அதிகரித்திருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு பொருளாதாரமும் அரசியலும் முற்றிலும் நிலைகுலைந்து போவது என்பது எமது இலக்கல்ல என்றும் வெனிசுலாவின் கடனை படிப்படியாக அடைக்க உதவும் அதே நேரத்தில் எந்த தனி நபரையும் குறி வைக்காது அந்நாட்டு அதிபர் நிக்கொலஸ் மடுறோவுக்கு நாட்டின் குழப்ப நிலையை அமைதிப் படுத்த சந்தர்ப்பம் தருவது என்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

முக்கியமாக வெனிசுலாவின் ஆளும் கட்சியும் எதிர்த் தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் அங்கு அமைதியும் ஜனநாயகமும் திரும்ப வலியுறுத்தப் படும் என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அல்ஃபோன்சோ டாஸ்ட்டிஸ் நிருபர்களுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வெனிசுலா எதிர்க் கட்சியினர் அதிபர் மடுறோவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனின் ஆயுத விநியோகத் தடை விதிக்கப் பட்ட நாடுகளான சிரியா மற்றும் வடகொரியா ஆகியவை அடங்கிய பட்டியலில் தான் தற்போது வெனிசுலாவும் சேர்க்கப் பட்டுள்ளது. எனினும் வெனிசுலாவுக்கு 2010 மே முதல் 2017 மார்ச் வரையிலான காலப் பகுதியில் பிரிட்டன் மட்டுமே சுமார் 1.4 மில்லியன் பவுண்ட்ஸ் விலையுடைய ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக CAAT என்ற ஆயுத விற்பனைக்கு எதிரான தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிக்கத் தயார் நிலையில் ஐரோப்பிய யூனியன்! : ஆயுத விற்பனை ரத்துக்கு அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com