Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) முழுமையாக விலகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த இடத்தை ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதர் அணி நிரப்பலாம் என்று தெரிகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியும் இணைந்து செயற்படுவது பற்றிப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருக்கும், வரதர் அணியின் முக்கியஸ்தருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் சாதகமான இறுதி முடிவு எட்டப்படலாம்.

பேச்சுவார்த்தையில் சாதக முடிவு எட்டப்படின் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியினரின் ‘தமிழர் சமூக ஜனநாயக கட்சி’ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகவில்லை என்று தெரிவித்துள்ள அதேநேரம், கூட்டமைப்பின் சின்னமாக வீட்டுச் சின்னத்தை ஏற்க முடியாதென்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தச் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுரேஷ் அணியினர் வெளியேறும் பட்சத்தில் அந்த வெற்றிடத்திற்கு வரதர் அணியை இணைத்துக் கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள அதேவேளை, கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் மீள்பிரவேசம் செய்வதற்கு திரு.வரதராஜப்பெருமாள் விருப்பம்கொண்டுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

0 Responses to த.தே.கூ.வுக்குள் சுரேஷின் இடத்தை வரதர் நிரப்புவார்?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com