Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி நேற்று செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 5 நீதிபதிகள் பணியிடங்களில் தேர்தல் மூலம் 4 பேர் தேர்வாகி விட்டனர். கடைசி இடத்திற்கு, இந்தியாவின் தல்வீர் பண்டாரி, இங்கிலாந்தின் கிறிஸ்டோபர் கிரீன்வுட் இடையே கடும் போட்டி நிலவியது.

இதுவரை 11 கட்ட தேர்தல் நடந்துள்ள நிலையில், ஐ.நா பொதுச் சபையில் பெரும்பான்மை ஆதரவு பண்டாரிக்கும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை ஆதரவு நிரந்தர உறுப்பு நாடான இங்கிலாந்தின் வேட்பாளர் கிரீன்வுட்டுக்கும் இருந்து வந்தது. பொதுச்சபையில் பண்டாரிக்கு 3இல் 2 பங்கு ஆதரவு உள்ளது. இவரை விட சுமார் 50 ஓட்டுகள் கிரீன்வுட் பின்தங்கி உள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பு சபையில் கிரீன்வுட் 9 வாக்குகளும், பண்டாரி 4 வாக்குகளும் பெற்று வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக இழுபறி நீடித்தது. 12ஆம் கட்ட தேர்தல் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் இந்தியாவின் வெற்றியை தடுக்க, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான இங்கிலாந்து மறைமுகமாக சதி செய்தது. இந்தியாவின் வெற்றியை தடுக்க வேண்டுமெனில் ஐ.நா.வின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த இங்கிலாந்து வலியுறுத்தியது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அது நிச்சயம் இங்கிலாந்துக்கே சாதகமாக அமையும். எனவே இந்த முறையை கையாளக் கூடாது என ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயீத் அக்பரூதீன் ஐநா பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறினார்.

எத்தனை முறை வாக்கெடுப்பு நடத்தினாலும் இந்த முட்டுக்கட்டையை உடைக்க முடியாது என்பதால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுகிறோம் என ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்களிடம் ஐ.நாவுக்கான இங்கிலாந்தின் நிரந்தர பிரதிநிதி மேத்யூ ரிகிராப்ட் தெரிவித்தார்.

இங்கிலாந்து விலகியதை அடுத்து, 12வது கட்ட தேர்தல் நேற்று அதிகாலை நடந்தது. இதில் ஐ.நா பொதுச் சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில், 183 பேர் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாதுகாப்பு கவன்சிலில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களும் இந்தியாவுக்கே வாக்களித்தனர். இதையடுத்து இந்தியாவின் தல்வீர் பண்டாரி(70) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சயீத் அக்பரூதீனுக்கு ஐ.நா பொதுச் சபையில் பிறநாட்டு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

0 Responses to சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com