மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றினார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்சரவை பரிந்துரை செய்து அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்சரவை பரிந்துரை செய்து அனுமதி வழங்கியுள்ளது.
0 Responses to மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமனம்!