Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிரகாரம், ஜனாதிபதியுடனான சந்திப்பை, ஜனாதிபதி செயலகம், எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது. அந்த ஏற்பாடானது, வரவேற்கத்தக்கது என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கூறியுள்ளது.

“எம்மை அழைத்திருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எம்முடைய பிரச்சினைக்கு, நல்லதொரு பதிலைத் தருவார் என்று, எதிர்பார்த்துள்ளோம்” என்று எஸ்.நாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com