Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி அதிகார சபைகளின் வட்டார எல்லைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை திருத்தி கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிர்வரும் 04ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான விசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதித்தது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006 44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அதிகாரமற்றது என்று கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் திகதியன்று ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த தொடகே சிறிசேன பெர்னாண்டோ, கண்டியைச் சேர்ந்த வருசமானதேவகே கெதர விஜேரத்ன, ஹல்மில்லவௌயைச் சேர்ந்த கீர்த்தி மஹிந்த கருணாதிலக்க, பண்டாரவளையைச் சேர்ந்த டிலந்த கனிஷ்க ஆரியரத்ன, உடவளவையைச் சேர்ந்த ஜனாக குமார ராஜபக்ஷ சேனாதீர, தெனியாயவைச் சேர்ந்த பிலதுவ ஹேவாகே யொஹான் தனுஷ்க ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவின் பிரதிவாதிகளாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அவ்வமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

உள்ளூர் அதிகார சபைகளின் வட்டார எல்லைகளை நிர்ணயிக்கவும் குறிப்பிட்ட தொரு வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com