Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்குமாறு மஹிந்த அணி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.

இதன்படி துமிந்த திஸாநாயக்கவை தூக்கிவிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இந்த விடயம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

மஹிந்த மற்றும் மைத்திரி அணிகளின் இணைவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க வெளியிட்டுவரும் கருத்துகளே பிரதான தடையாக இருக்கின்றன என்று சுதந்திரக் கட்சியின் நடுநிலைக்குழு ஏற்கனவே ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அணி முன்வைத்துள்ள நிபந்தனைப்பட்டியலில் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் அவசியம் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் தலைமைப்பதவி மற்றும் பொதுச் செயலாளர் பதவி ஆகியன ஒரே மாகாணத்தைச் சேர்ந்த இருவரிடம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பரீசிலித்துவருகிறார் என அறியமுடிகின்றது.

0 Responses to மஹிந்த அணியின் அழுத்தத்துக்கு மைத்திரி பணித்தார்? சுசிலுக்கு சுதந்திரக் கட்சி செயலாளர் பதவி?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com