Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிச் சோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது” என்று திவாகரன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவிலில் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று புதன்கிழமை தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவ விழாவில் காவிரியில் தண்ணீர் விடாமல் உள்ளனர்.

கோவையில் கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி உள்ளார். இதை அமைச்சர்கள் வரவேற்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை பார்க்கும் போது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் தெரிகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடியும், மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் விட்டு கொடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற 2 பேருக்கும் திராணி இல்லை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிசோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது. சுமார் 187 இடங்களில், 400 வாகனங்கள், 1800 அதிகாரிகள் என்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஒரு நாள் மட்டுமே அரசாங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. மீத நாட்களில் அந்தந்த வீடுகளிலேயே சாப்பாடு வழங்கப்பட்டது.

அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் வீட்டில் 1500 கோடி பணம், 1 டன் நகைகள் வருமான வரி சோதனையில் சிக்கியது. அதன்பிறகு இதுபற்றி எந்த தகவலும் இல்லை. எங்களை மிரட்டி அடிபணிய வைக்கவே இந்த சோதனை நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வருவது எல்லாம் பொய். எங்கள் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் இன்று வரை எங்களிடம் தான் உள்ளனர்.

அதிமுக தற்போதும் எங்களிடம்தான் உள்ளது. சோதனைகள் மூலம் எங்களை பணிய வைக்க முடியாது என கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிக்கள்தான் அதிமுக என நினைத்தால் அது தவறு. தமிழகத்தில் ஆட்சி உள்ள வரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் அதிமுகவில் இருப்பார்கள். ஆட்சி முடிந்த பிறகு அவர்கள் பாஜகவில் இணைந்துவிடுவார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to எங்களுக்கு எதிரான வருமான வரித்துறைச் சோதனை தோல்வி: திவாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com