Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைவதற்கோ, கட்சி அடையாளங்களை முன்னிறுத்துவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அந்தக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்களும் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை தனித்தனியாக அழைக்க முடியாத சூழ்நிலை காரணமாக, ஊடகங்கள் ஊடாக அழைப்பு விடுக்கின்றோம்.”என்றுள்ளது.

0 Responses to மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை: மாவீரர் தினப் பணிக்குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com