முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொது மக்களின் காணிகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, கிளிநொச்சி, இரணைதீவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இம்மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கேப்பாப்புலவு காணிகள் தொடர்பில் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் போதே டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாப்புலவு காணிகள் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்: டி.எம்.சுவாமிநாதன்