Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான் இந்தியாவுக்கு சென்று வந்ததால், தேர்தல் கூட்டணி விடயத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.” என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்திய விஜயம், அந்தக் கூட்டணி உருவாக்கத்தை தடுத்துள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒரு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து புதிய தேர்தல் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திட்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுரேஷ் பிரேமச்சந்திரன், “நான் இந்தியாவுக்கு தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு சென்னைக்கா, டில்லிக்கா செல்கிறேன் என்பதெல்லாம் பிரச்சினையில்லை. மற்றக்கட்சிகளின் தலைவர்கள் போவதில்லையா? டில்லிக்குச் சென்றுதான், இந்தியாவோடு பேச வேண்டுமா? கொழும்பில் இந்தியத் தூதரகம் இல்லையா அல்லது யாழ்ப்பாணத்தில் இல்லையா? ஏதாவது பேச வேண்டுமென்றால், அங்கேயே பேசலாம். அப்படியிருக்க, டில்லிக்கு சென்று வந்ததால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து கூட்டணி அமைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பொய்யானது. இப்போதும், இந்தப் புதிய கூட்டமைப்போடு வந்து இணையுமாறு அவர்களை அழைக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘நான் டில்லிக்குப் போனதால் மாற்றமா?’ புதிய கூட்டணி பற்றி சுரேஷ் பிரேமச்சந்திரன் பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com