மாசற்ற சக்தி, சுகாதாரமான நகரங்கள் மற்றும் விவசாயம் போன்ற தேவைகள் அடங்கலாக பருவ நிலை சீர்கேட்டினைக் குறைக்க ஐரோப்பிய யூனியன் €9 பில்லியன் யூரோக்கள் தொகையை அறிவித்துள்ளது.
இது தவிர உலகின் முதல் நிலைக் கோடிஸ்வரரான பில்கேட்ஸின் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் பருவநிலை சீர்கேட்டைக் குறைக்க $300 மில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐரோப்பிய யூனியனின் அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இணைந்து இத்தொகையினை அறிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் இடம்பெற்ற ஒன் பிளேனட் மாநாட்டில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்ற பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரேன் இது சுவட்டு எரிபொருளில் பெரும்பாலும் தங்கியிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு மாற்றீடாக இருக்கும் எனவும் ஆனால் உலகளாவிய ஒத்துழைப்பு இன்னமும் தேவை எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் பருவ நிலை மாற்ற மற்றும் சக்தித் துறை கமிசனரான மிகுவேல் அரியாஸ் கனேட்டே கருத்துத் தெரிவிக்கையில் ஐரோப்பா மட்டுமன்றி பிற நாடுகள் முக்கியமாக ஆப்பிரிக்காவில் இருந்தும் இந்தத் தேவைக்கு அதிக முதலீடு தேவைப் படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் வறுமையைப் போக்கவும் சுகாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியற்ற தேசங்களில் தொழிநுட்ப முன்னேற்றம் போன்ற இலக்குகளை அடைவதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பருவ நிலை சீர்கேட்டைக் குறைக்க £20 பில்லியன் யூரோக்கள் அளித்திருந்தது. இதைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பருவ நிலைக்கு சீர்கேட்டை ஏற்படுத்தாத விதத்தில் செயற்கை அறிவுத் துறையை வளர்க்க $50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பருவநிலை சீர்கேட்டை குறைக்க €9 பில்லியன் யூரோக்கள் தொகையை அறிவித்தது ஐரோப்பிய யூனியன்