Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று திங்கட்கிழமை காலை நியூயோர்க் மான்ஹட்டான் துறைமுகத்துக்கு அண்மையில் இருந்த பேருந்து நிலையம் அருகே தீவிரவாதி என சந்தேகிக்கப் படும் நபர் ஒருவர் சிறியளவிலான வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளார்.

இத்தாக்குதலை நடத்திய நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த ISIS உடன் தொடர்புடைய அகாயத் உல்லா என்றும் இதன்போது 5 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் நியூயோர்க் போலிசார் அறிவித்துள்ளனர். இந்த நபர் தனியாக செயற்பட்டே இத்தாக்குதலை நடாத்தியதாகத் தெரிவித்த நியூயோர்க் மேயர் பில் டி பிளெசியோ இது போன்ற செயல்கள் மூலம் பொது மக்களின் அமைதியைக் குழப்ப தீவிரவாதிகள் செய்யும் சதிமுயற்சி இனிமேலும் தோற்கடிக்கப் படும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வருடத்துக்கு 65 மில்லியன் மக்கள் கடந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையம் மிகவும் பரபரப்பானது என்ற போதும் இத்தாக்குதல் முயற்சியை அடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 2011 இல் அகாயத் உல்லாவின் குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்ததாகவும் இவர் மீது இதற்கு முன் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை எனவும் இச்சம்பவம் தொடர்பில் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம் போலிஸ் விசாரணையிலோ அண்மைக் காலமாக காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்களுக்குப் பழி வாங்கவே நியூயோர்க்கில் தாக்குதல் நடத்தியதாகக் குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிய வருகின்றது.

0 Responses to நியூயோர்க் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் அச்சுறுத்தல்! : கைதான நபர் ISIS உடன் தொடர்பு என ஊகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com