Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் முறுகல் நிலை முற்றியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

எனினும், சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியினரை திருடர்கள் என விமர்சித்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களுடன் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் 10 அமைச்சர்கள் மற்றும் ஒரு முதலமைச்சர் தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தபோது, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதும் இந்த அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com