Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்காண்டினெண்ட்டல் என்ற லக்சரி ஹோட்டல் ஒன்றை நேற்று பின்னிரவு கிட்டத்தட்ட 4 தீவிரவாதிகள் முற்றுகையிட்டு நூற்றுக் கணக்கானவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். இதை அடுத்து ஆப்கானின் விசேட அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக 1960 இல் கட்டப் பட்ட இந்தக் கட்டடத்தின் கூரை பகுதியில் இறங்கி உள்நுழைந்து பதில் தாக்குதல் தொடுத்தனர்.

சுமார் 12 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டதாக ஆப்கான் உள்துறை அமைச்சு இறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலின் போது ஒரு வெளிநாட்டவர் உட்பட 6 பிணைக் கைதிகளும் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இத்தாக்குதல் நடவடிக்கையின் போது ஹோட்டலின் சில பகுதிகள் தீப்பிடித்து எரிந்ததுடன் ஒரு சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்கவும் முயன்றுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின் போது 41 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 153 பேர் ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப் பட்ட போதும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என உள்ளூர் ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன. காபூலில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்டு வருகின்றனர் என அமெரிக்கா புலனாய்வுத் தகவல்கள் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் திரைப்படப் பாணியில் அமைந்துள்ள இந்த மற்றுமொரு தீவிரவாதத் தாக்குதல் நடவடிக்கை மூலம் ஆப்கானில் பொது மக்கள் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான நகரங்களில் காபூல் முன்னணியில் இருப்பது மறுபடியும் ஒரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது.

0 Responses to ஆப்கான் ஹோட்டலை முற்றுகை 12 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்கு வந்தது : 6 பேர் பலி என அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com