Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெப்ரவரி 9 ஆம் திகதி தென்கொரியாவின் பியாங்சாங் என்ற நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் கலந்து கொள்ள வடகொரியா விருப்பம் தெரிவித்ததை அடுத்துத் தன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தென்கொரியா அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று வடகொரியா ரி சன் ஜிவோன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியிருந்தது.

தென்கொரியா தரப்பில் சோ மயூங் கியோன் தலைமையிலான குழு இந்தக் குழுவை எதிர் கொண்டு ஜனவரி 9 ஆம் திகதி இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் பேச்சுவார்த்தையை நடத்தின. இதன் போது வடகொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவும் இரு நாடுகளும் இப்போட்டியின் போது ஒரே கொடியின் கீழ் அணி வகுக்கவும், ஐஸ் ஹாக்கி போட்டியில் இரு நாடுகளின் ஒன்றிணைந்த அணியைப் பங்கேற்கச் செய்வதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. இப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பலனாக கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் எட்டப் பட சாதகமான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை சர்வதேச அளவில் ஏற்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இவ்வார இறுதியில் நடைபெற இருந்தது எனவும் ஆனால் இதனைத் திடீரென வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ரத்து செய்து விட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஏற்பாடாகி இருந்த தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையைத் திடீரென ரத்து செய்தார் கிம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com