Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னக நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு உள்ளிட்டவற்றை இணைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், டெல்லியில் இன்று வியாழக்கிழமை வரவு- செலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

கூட்டத்தின் போது கோதாவரி, கிருஷ்ணா,பெண்ணாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று ஆழமாக எடுத்துரைத்ததாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

0 Responses to தென்னக நதிகளை இணைக்குமாறு மத்திய அரசிடம் கோரினோம்: ஓ.பன்னீர்செல்வம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com