Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீபத்தில் வடமேற்கு ஐரோப்பாவின் பெல்ஜியம், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டனின் சில பகுதிகளைத் தாக்கிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்ட மோசமான புயலில் 4 பேர் பலியாகி உள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்தில் மாத்திரம் 3 பேரும் பெல்ஜியத்தில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.

புயல் தாக்கிய முக்கிய பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்து பாதைகள் அடைபட்டும் மின்கம்பங்கள் அறுந்து வீழ்ந்தும் உள்ளன. ஐரோப்பாவின் மிக முக்கியமான விமான நலையங்களில் ஒன்றான அம்ஸ்டெர்டாமின் சிபோல் விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் இடை நிறுத்தப் பட்டுள்ளன. 140 km/h வேகத்தில் கடும் புயல் காற்று வீசி வருவதால் கிட்டத்தட்ட 260 விமானங்கள் உடனடியாகத் திசை திருப்பப் பட்டன. தற்போது வழமைக்குத் திரும்பக் கூடிய சில விமானங்களும் கடும் தாமதத்தைச் சந்திக்கும் எனவும் அனைத்து சேவைகளும் சரியாக இயங்க இன்னும் சில தினங்கள் செல்லலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர நெதர்லாந்தில் பல ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளன.

ஜேர்மனியின் சனத்தொகை நெருக்கடி மிக்க ரூஹ்ர் என்ற பகுதியிலும் ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளன. கடும் புயல் இன்னமும் வீசி வருவதால் பொது மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதேவேளை ரஷ்யாவின் வடக்கே உள்ள யாகுடியா என்ற குளிர் அதிகமான பகுதியில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் அதிகபட்சமாக மைனஸ் 67 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியுள்ளது.

மாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள இந்த யாகுடியா பகுதி சராசரியாக மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் பொது மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது குளிர் மிகவும் அதிகரித்திருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் கடும் குளிருக்கு அங்கு இருவர் பலியாகி உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to வடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய தீவிரமான புயலில் 4 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com