Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய கட்சிகளுக்கு போட்டியிடுவதற்குரிய வேட்பாளர்கள் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால், அதுதொடர்பிலும் நாம் பார்த்துக் கொள்வோம். அத்துடன் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிபலனை அனுபவிக்க தெரியாமல் இல்லை. அதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதையே தற்போது தான் செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com