Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“கீரியும் பாம்புமாக இருந்த இருண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் பிரச்சினைகள் இருப்பது இயல்பானது. அதற்காக, கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால், கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடக்கமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்திருக்கின்றார். அதுபோல, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு அறிவுறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.” என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமைச்சரவை கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி வெளிநடப்புச் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஜனாதிபதி வெளிநடப்புச் செய்யவில்லை. தன்னைப்பற்றி தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் அவர் அமைச்சரவையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து பிரதமரும் வேறு அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்தார்கள். தமது தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உரிய அறிவுறுத்தல் வழங்குவதாக பிரதமர் கூறினார். ரவி கருணாநாயக்கவுடன் தனியாக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியில் இருந்து விமர்சிப்பதை விட உள்ளே இருந்து விமர்சிப்பது வேதனையானது. தேசிய அரசாங்கத்திலுள்ள பலருக்கு நல்லாட்சி அரசு பற்றி தெரியாது. நல்லாட்சி அரசில் எவ்வாறு நடந்து கொள் வேண்டும் என்பது தெரியாமல் சிலர் செயற்படுகிறார்கள்.

அரசில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்போர் வெளியேறுவதே சிறந்தது. அகலவத்தையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி அரசில் இருக்க முடியாதவர்களுக்கு வெளியேறுமாறு கூறியிருந்தார்.

அரசில் இருந்து கொண்டு எவருக்கும் ஜனாதிபதியையோ பிரதமரையோ விமர்சிக்க முடியாது. கடந்த அரசில் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் நடந்த விதம் பற்றியும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறினார்.

ஜே.ஆரின் ஆட்சியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்வதற்கு பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாஸ எதிர்ப்பு தெரிவித்தார். அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறுமாறு ஜே.ஆர் கூறியிருந்தார். அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கும் பிரேமதாஸ வந்திருந்தார். இந்த பிரச்சினையால் அரசாங்கம் உடையவில்லை. 17 வருடங்கள் நீடித்தது. 2017 இல் ஆட்சி கவிழும் என்றார்கள்.எதுவும் நடக்கவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com