Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பல இடங்களில் வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வந்தது. இதையடுத்தது தன்மீதான வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதனைக் கேட்ட நீதிமன்றம் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது.

ஆராய்ச்சி கட்டுரையில் இருந்த கருத்தைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். எனவே அது அவரது சொந்த கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வைரமுத்து கூறியதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to ‘ஆண்டாள்’ குறித்து வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை: உயர்நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com