Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் குற்றச் சாட்டுக்களில் அதிகம் சிக்கியிருந்த தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜுமா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்நாட்டின் அதிபராக முன்பு துணை அதிபராகக் கடமையாற்றிய சிரில் ராமபோசா என்பவர் பதவியேற்றுள்ளார்.

இதனால் தென்னாப்பிரிக்காவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முக்கிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் ஜேக்கப் ஜுமா பதவி நீக்கம் செய்யப் படும் வாய்ப்பு ஏற்பட்டதை அடுத்துத் தான் அவர் தானாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்கப் பாராளுமன்றத்தில் அதிபர் பதவிக்கு சிரில் ராமபோசாவின் பெயர் மாத்திரமே மும்மொழியப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதற்கு உடன்படாத பொருளாதார சுதந்திரத்துக்கான போராளிகள் என்ற ஒரு முக்கிய எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அதிபர் தேர்வு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அது ஏற்கப் படாத காரணத்தால் வெளிநடப்புச் செய்தனர்.

தென்னாப்பிரிக்காவின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவரான சிரில் ராமபோசா வெள்ளை இனவாத அரசுக்கு எதிராகப் போராடி 2 வருட சிறை வாசம் அனுபவித்தவர் ஆவார். 1990 இல் தென்னாப்பிரிக்க தேசத் தந்தை நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட ஆவண செய்த குழுவின் தலைவரும் இவர் ஆவார். மண்டேலாவுக்குப் பின்பே அதிபராவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப் பட்ட இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக 2017 இல் தான் தேர்வானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபரான ராமபோசாவுக்கு கடுமையாகச் சரிந்துள்ள தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புதல் மற்றும் அதிகரித்துள்ள வேலை வாய்ப்பின்மைப் பிரச்சினையைச் சரி செய்தல் என்பன முக்கிய சவால்களாக உள்ளன.

0 Responses to தென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் சிரில் ராமபோசா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com