Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ஊழல் மோசடியில் ஈடுபடும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் பாராளுமன்றத்தினூடாக தண்டனை வழங்குவதற்கு பதிலாக, மீண்டும் பாராளுமன்றத்துக்கு அவரால் வரமுடியாதபடி நடைமுறையிலுள்ள அரசியலைமைப்பை கடுமையாக்க வேண்டும்.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குற்றவாளிக்கு மீண்டும் அரசியலில் களமிறங்குவதற்குரிய கால வரையறையை நீக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் இடமேயொழிய தண்டனை வழங்கும் நிறுவனமாக மாறக்கூடாது என சுட்டிக்காட்டிய அநுர குமார திசாநாயக்க, அதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது என்றுள்ளார்.

பிணைமுறி சர்ச்சை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to ஊழல் மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்துக்கு வர முடியாதவாறு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அநுர குமார திசாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com