“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தேர்தலொன்றைச் சந்தித்து வடக்கு கிழக்கு முழுவதும் 75 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. வடகிழக்கில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகித்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் ஏனையோருடன் இணையாது, ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், இதுவரை காலமும் ஏக பிரதிநிதிகள் எனத் தம்மை வரித்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர் இந்தத் தேர்தலில் முன்னரை விட குறைந்தளவிலான வாக்குகளையே பெற்றுள்ளனர். மாற்றமொன்று வேண்டுமென வாக்களித்த மக்களை தமிழரசுக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த பல வருடங்களாக கூட்டமைப்பில் இருக்கக் கூடிய கொள்கை முரண்பாடுகளைக் களைய வேண்டுமெனக் கோரி வந்தோம். ஆனாலும் அத்தகைய கோரிக்கைகள் தமிழரசால் நிராகரிக்கப்பட்டே வந்தது. அவ்வாறானதொரு நிலையிலேயே மாற்றுத் தலைமை ஏற்பட வேண்டுமென மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.
மக்கள் ஆணையை மீறி கூட்டமைப்பு செயற்பட்டதால் சரியான பாதையில் செல்லுமாறும் வலியுறுத்தி வந்தோம். ஆனாலும் அதனையும் தமிழரசு கேட்காத நிலையில் நாங்கள் அதிலிருந்து வெளியேறி புதியதோர் கூட்டமைப்பை அமைத்து வெற்றி பெற்றிருக்கின்றோம்.
தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவும் பெரு வெற்றியை பெற்றிருக்கின்றார்.
இதனால் கொழும்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் சமஷ்டியைக் கோருகின்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கேட்கின்றார். உண்மையிலையே தெற்கில் ஏற்படப் போகும் மாற்றமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கின்ற போது கூட்டமைப்பினருக்கு மட்டும் இந்த மாற்றம் குறித்து தெரியாமல் இருந்ததா? அதற்கான திட்டங்கள் குறித்து ஏதாவது யோசித்து வைத்திருக்கின்றார்களா? எனக் கேட்கின்றோம்.
இணைவு அல்லது ஒற்றுமை என்பதை வெறுமனே வாய்மொழி மூலமாக கூட்டமைப்பினர் கோருவதனை விடுத்து, அனைவரும் இணைந்து கலந்துரையாடி திட்டமிட்ட தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சுயநலன்களுடன் தனித்து நின்று செயற்பட்டால் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது.
மஹிந்தவின் மீள் வருகையும் பலத்த பாதிப்புக்களை தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய சூழல் நிலவுவதால் தமிழ்த் தரப்புக்கள் கட்சிசார் அடிப்படையில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் பல கட்சிகளதும் 2ஆம் நிலைத் தலைவர்கள் எம்முடன் பேசியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைமைகள் எம்முடன் பேசவில்லை” என்றார்.

0 Responses to தேசிய நிலைப்பாட்டில் பேசி தீர்மானம் எடுக்கவேண்டும்: சுரேஷ்