“மத்தியில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை எந்தக் கட்சியும் எம்மிடம் கோரவில்லை. புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளவர்கள் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுப்போம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா? என்பது தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின், எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும்.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.தே.கூ.விடம் கோரவில்லை: மாவை சேனாதிராஜா