Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. இரா.சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவின் பொக்கற் பைக்குள்ளேயே இருக்கின்றார்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை. தற்போது சிவசக்தி ஆனந்தன் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை. எனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் யாழ்ப்பாண மக்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இருந்தது. உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாம் வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது.

ஆனால், நாங்கள் இருந்த போது காணப்பட்ட நிலைமைகள் இன்று இருக்கின்றதா என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய ஆட்சி உருவாகி குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் என்ன அபிவிருத்தி இடம்பெற்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் ஆட்சியில் இருந்த போது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் மகிந்தோய ஆய்வு கூட வசதிகள், மிக நீண்ட காலமாக இல்லாதிருந்த வடக்கிற்கான புகையிரத சேவை என அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியை முன்னெடுத்திருந்தோம்.

இவ்வாறு நான் அபிவிருத்திகளை செய்தற்கு காரணம் தெற்கு மக்கள் போன்று வடக்கு மக்களும் வாழ வேண்டும் என்பதற்காகவே, ஆனால் இன்று எமது மண்ணில் விளைந்த விசாய பொருட்களான அரிசி, உழுந்து, விவசாய பசளைகள் கூட வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னனி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்கின்றன. இதில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. இரா.சம்மந்தன் ரணில் விக்ரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்.

நான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை. தற்போது சிவசக்தி ஆனந்தன் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை. எனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம்.

இந்த அரசாங்கம் பொய்களை கூறிக் கூறிக் கொண்டிருந்த்தை தவிர வேறேதனை செய்திருந்தது. எனவே இவர்களுக்காக உங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தற்போது புதிய வித்தியாசமான கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எம்மை எமது சின்னமான தாமரை மொட்டு சின்னத்தை மக்கள் வெற்றிபெற செய்து முன்னைய காலம் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சம்பந்தன் ரணிலின் பொக்கற்றுக்குள் இருக்கிறார்; மஹிந்த குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com