Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தென்னிலங்கையில் புதிய அரசாங்கமொன்று அமையும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யபோகின்றது? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும். வெறுமனே இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை.“ என்றுள்ளார்.

0 Responses to த.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com