Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி என்பவர் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

இவர் நேபாலின் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக மன்னராட்சியில் இருந்த நேபால், மக்களின் ஒருமித்த போராட்டதுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு குடியரசாக உதயமானது.

அங்கு புதிய அரசியல் சாசனத்தின் பிரகாரம் இரு சபைகள் கொண்ட பாராளுமன்றமும் அமைக்கப் பட்டது. இதன் பின் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்டணி தோல்வியடைந்ததுடன் நேபாள கம்யூனிசக் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றும் இருந்தது. சமீபத்தில் பாராளுமன்ற மேல் சபைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிக் கூட்டணியின் நேபாள கம்யூனிசக் கட்சி 27 இடங்களையும் மாவோயிஸ்ட் மத்திய கட்சி 12 இடங்களையும் என மொத்தம் 39 இடங்களில் வெற்றி பெற்றது. நேபாள காங்கிரஸ் கட்சி வெறும் 13 இடங்களிலும் இதர கட்சிகள் 4 இடங்களிலும் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்ட பின்னர் ஜனாதிபதி பிந்தியா தேவி பந்தாரியின் கீழ் முன்னர் பிரதமராகப் பணியாற்றிய பகதுர் துபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சர்மா ஒலி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப் பட்டார்.

இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி பிந்தியா தேவி பந்தாரி முன்னிலையில் சர்மா ஒலி நேபாலின் 38 ஆம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com